பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதற்கான மேற்கத்திய சக்திகளின் நடவடிக்கைகளை செவ்வாயன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டித்துள்ளார், அத்தகைய நடவடிக்கைகள் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸின் “கொடூரமான அட்டூழியங்களுக்கு” வெகுமதி அளிக்கும் என்று கூறினார்.
காஸா போரைத் தூண்டிய இஸ்ரேல் மீதான கொடிய தாக்குதலில் ஹமாஸ் அவர்களைக் கைப்பற்றி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதில் உலக வல்லரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய ட்ரம்ப் கூறினார்.
பின்னர் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, டொனால்ட் ட்ரம்ப், காஸா நெருக்கடி குறித்து விவாதிக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உட்பட முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார். இதில் துருக்கி, கட்டார், சவூதி அரேபியா, இந்தோனேசியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , ஜோர்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.
பிரான்ஸ், பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா ,போத்துகல் ஆகிய நாடுகள் கடந்த இரண்டு நாட்களில் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. அவர்களின் நடவடிக்கைகள் இஸ்ரேலையும், அமெரிகாவையும் கோபப்படுத்தியுள்ளன.