நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை திங்கட்கிழமை (10) வெளியிடும் என்று அதன் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளக குழு ஊடாக விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்சக்தி அமைச்சும் மின்தடை பற்றிய விரிவான விசாரணையை நடத்தி வருவதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.
இதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் இவ்வாறு மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது, இறுதியாக 2023 டிசம்பர் 9ஆம் திகதி மின்வெட்டு ஏற்பட்டது, மேலும் மின்சாரத்தை மீட்டெடுக்க சுமார் 6 மணிநேரம் சென்றது.
இதேபோன்று, 2016 மார்ச், 2020 ஓகஸ்ட்டிலும் , 2021 டிசம்பரிலும் மின்சாரம் நாடளாவியரீதியில் துண்டிக்கப்பட்டது.
Trending
- வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உதவி திட்டம் முன்னெடுப்பு
- மொரட்டுவையில் ஆறு குழந்தை தொழுநோயாளிகள் கண்டுபிடிப்பு
- ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தர பதவி நீக்கம்
- கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு விரைவில் திருமணம்
- ரஷ்ய ராணுவத்திற்கு வெளிநாட்டு ஆடைகளை தடை செய்ய புட்டின் உத்தரவு
- பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்து தந்தையும் மகனும் பலி
- போக்குவரத்தை சரிசெய்யும் ‘குட்டிப்புலி’ ரோபோ
- அமிதாப் பச்சன் படத்தில் இருந்து விலகினார் தீபிகா படுகோன்