அலதெனிய பகுதியில் நேற்றிரவு (12) மற்றுமொரு பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 20 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பிரிகம, கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாத்திரை சென்ற பேருந்து ஒன்றே பாதையை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.