தென் அமெரிக்க மழைக்காடுகளைப் பூர்வீகமாகக்கொண்ட கார்பி கழுகை நீங்கள் கண்டால், பறவை வேடம் தரித்த ஒரு மனிதன் என்றே நினைப்பீர்கள்.
சுமார் ஒரு மீற்றர் உயரமுள்ள ஹார்பி கழுகின் கண்கள் மனிதக் கண்கள் போல
காட்சியளிக்கும், அதன் பெரிய நகங்கள் மனிதக் கைகள் போல காட்சியளிக்கும்.
தலையில் கட்டிய கொண்டை போன்ற சிகை அலங்காரமும் நீண்ட அதன் இறக்கையும் பார்ப்பவர்களை திகைப்பூட்டும்.
அதன் விசித்திர தோற்றமும் காடுகளில் எதிரொலிக்கும் அதன் குரலும் மனித சிரிப்பொலியைப் போன்றே வினோதமாக இருப்பதால் மனிதர்கள் என நினைத்து ஒரு கணம் அதிர்ந்தே போவீர்கள்.