மனித உருவ ரோபோவினால் இயக்கப்படும் உலகின் முதலாவது வர்த்தக நிலையமொன்று சீனாவின் பீஜிங்கில் திறக்கப்பட்டுள்ளது.
9 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வர்த்தக நிலையம் கால்போட் என்ற மனித உருவ ரோபோவால் இயக்கப்படுகின்றது.
இந்த ரோபோ பல மொழிகளைக் கையாளும் திறன் கொண்டது எனவும் இந்த வர்த்தக நிலையத்தில் பானங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


