சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய கிறிக்கெற் ஸ்டேடியமாக மதுரையில் உருவாகி உள்ள இந்த மைதானத்தில் 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் கொண்ட வசதி, இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை, அவர்களுக்கான ஜிம் வசதி, அம்புலன்ஸ் , மருத்துவமனை வசதி, கார் பார்க்கிங் வசதி உள்ளிட்டவையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் மைதானத்தை போல் மழை பெய்தாலும் ஆட்டம் விரைவாக தொடங்கும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மைதானத்தை சுற்றி 5 அடியளவில் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 36 கோடி ரூபா செலவில் மதுரையில் கிறிக்கெற் ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அவுஸ்திரேலியா , இங்கிலாந்து உள்ளிட்ட கிறிக்கெற் மைதான வல்லுநர்களுடன்
ஆலோசித்து மைதானத்தின் லைட்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தை நாளை 9ம் திகதி இந்திய கிறிக்கெற் அணியின் முன்னாள் கப்டன் எம் எஸ் தோனி திறந்து வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள இந்த மைதானத்தில் டி.என்.பி.எல், ஐ.பி.எல் , ரஞ்சி டிராபி
போட்டிகள் நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.