மதுகம, தோலஹேன பகுதியில் நேற்று (18) பகல் கழுத்து அறுக்கப்பட்டு, பிற வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
மதுகம பொலிஸாருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில், அந்தப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
காதல் விவகாரம் தொடர்பான தகராறில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய மதுகம பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.