Sunday, September 14, 2025 3:15 pm
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் இன்று (14) விபத்தொன்றில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறையில் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கூட்டம் ஒன்றில் பங்கேற்று மட்டக்களப்புக்கு திரும்பிய அவரது வாகனம் களுவாஞ்சிக்குடியில் காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


