போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார்.
வத்திக்கான் நகரின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நாளை காலை 10 மணிக்கு பிரான்சிஸின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
நீண்ட நாட்கள் ஏற்பட்ட உடல்நலக் குறைவுப் போராட்டத்தின் பிறகு கடந்த திங்கட்கிழமை தனது 88 ஆவது வயதில் பிரான்சிஸ் இயற்கையை எய்தினார்.
ரோமில் உள்ள போப்பாண்டவர் உறைவிடமான செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படவுள்ளார்.