வவுனியாவைச் சேர்ந்த போசானந்தன் என்று அழைக்க படும் வெ.தேவநாயகன் என்பவர் போதைவஸ்த்து அற்ற எதிர்காலத்தை உருவாக்க வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான நடைபயண த்தினை முன்னேடுக்கயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று நடை பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பிலே அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வி,கலை,கலாசாரம்,பண்பாட்டு விழுமியங்கள், சிறுவர்களின் முன்னேற்றம் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி என்ப மழுங்கடிக்கப்படுகின்றது. பல அபாயகாளமான குற்றச்செயல்கள் இடம்பெறுவதற்கும் சிறுவர் துஸ்பிரயோகம்,பாலியல் துஸ்பிரயோகம் போன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன.
எனவே போதை வஸ்துக்களில் இருந்து எங்கள் நாடு பாதுகாக்க வேண்டும். அதற்காக எதிர்கால 26 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபயணம் ஆரம்பமாகிறது. இந்த நடைபயணத்தினை மேற்கொள்ளுவதற்காக மலையகத்தில் இருந்து உலக சாதனைபடைத்த பொகல்லவலை சென் மேரிஸ் கல்லூரி வசந் குமார் நிஷாசனா மாணவியும், அவருடைய குடும்பமும் கலந்துகொள்கின்றன.
போதைவஸ்த்து அற்ற எதிர்காலத்திற்கு நடைபயண த்திற்கு அனைவரிடம் ஒத்துழைப்பினை வழங்குமாறுகேட்டுக்கொள்ளுகின்றேன் என்றார்.