நாடு முழுவதும் நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில், நேற்று (18) 736 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கைகள், பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கைகளில் பொலிஸார் 28,705 பேரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 50 பேரும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய 20 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.