புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மலரவுள்ள சர்வதேச சகோதரிகள் தினத்தை கொழும்பில் கொண்டாட வுள்ளதென அதன் தலைவி ரஞ்சனி சுரேஷ் தெரிவித்தார்.
பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் , பெண்பிள்ளைகள் தங்கியிருக்கும் காப்பகங்களுக்கு உடைகள் என்பன நவழங்கப்படும்.
இதில் விசேஷ அம்சமாக பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் குறும்படத்துக்கான கதை சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
நேரில் கலந்து கொண்டு கதை சொல்ல முடியாதவர்கள் பிரதிகள் மூலம் கலந்து கொள்ள முடியும்.பிரதிகள் அன்றைய தினம் வாசிக்கப்பட்டு அவையோரின் தீர்ப்புக்கு ஏற்ப ஒரு கதை தெரிவு செய்யப்படவுள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை அறியலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.