புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம் நடத்த திட்டமிட்டுள்ள ஹைக்கூ கவியரங்கத்தின் இரண்டாவது அமர்வு வரும் 16.07.2025 மாலை 4.30.மணிக்கு கொழும்பு-13, புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக் கவியமர்வுக்கு ஆசிரியரும் கவிஞருமான எஸ்.அழகேஸ்வரன் தலைமை ஏற்கிறார்.
இதில் இணைந்து கொண்டு ஹைக்கூ கவிதை பாட விரும்புவோர் அன்றைய தினம் நேரில் கலந்து கொள்ளலாம்.