பிரான்ஸின் எல்லைக்கு அருகே ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் அளவிலான பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த காட்டுத்தீயால் ஒருவர் பலியாகியுள்ளதுடன் குறைந்தது 13 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
80 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய காட்டுத்தீ இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதல் மற்றும் வறட்சி காரணமாக இந்த காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பிரான்கோயிஸ் பேய்ரூ தெரிவித்துள்ளார்.