Sunday, March 22, 2026 2:31 pm
2026 சட்டமன்ற தேர்லையொட்டி தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார், அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அவர் இன்று தனது ஆதரவாளர்களுடன் நடத்தவுள்ள ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நடிகர் சரத்குமார் தொடர்பான சில தகவல்கள் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வந்த சரத்குமார், அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளுடன் பல்வேறு தேர்தல்களில் இணைந்து போட்டியிட்டிருந்தார். பின்னர் 2024 மார்ச் மாதம் திடீரென தனது கட்சியை பாஜகவியில் இணைத்தார்.
தேர்தல் நெருங்கும் சூழலில், “இந்த முறை நான் நேரடியாக போட்டியிட விருப்பம் இல்லை; என் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறேன்” என சரத்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்படவில்லை என்பதால் சரத்குமார் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் அவர் அடுத்த கட்ட அரசியல் முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சரத்குமாரும், ராதிகாவும் திமுகவில் இணையலாம் என தகவல் பரவி உள்ளது.

