அனுரவின் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை [31] கல்வி அமைச்சில் நடைபெற்றது.
சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை ,நெறிமுறை குணங்களை வளர்ப்பது போன்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தொடர் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின் போது, அதில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் நோக்கங்களை விளக்கி, தனது கருத்துக்களை தெரிவித்தார்.
திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல தேவையான பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்கள் ஜி. எம். ஆர். டி. அபோன்சோ, எச். எம். கே. ஜே. பி. குணரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரந்த மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிற்சியில், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவும் பங்குபற்றின.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை