தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் செயல்பாடுகளுக்காக வற்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.