ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை பாதுகாப்பு அமைப்புகள் (NIA) இன்று வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை கிளை பொறுப்பு ஏற்றுள்ளது. சம்பவத்திற்குப் பின்னர் பஹல்காம் பகுதி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களின் உருவங்கள் தயார் செய்யப்பட்டன.
சந்தேகப்படுபவர்கள்: – ஆசிப் பவுஜி, சுலைமான் ஷா, அபு தல்ஹா மேலும், ஒரு நபரின் விவரம் இன்னும் உறுதியாகாத நிலையில் உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்தவரும் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகம்
புகைப்படங்களில் உள்ள நான்கு பேரில் இருவரது தோற்றம் வெளிநாட்டவர் எனக்கூறும் வகையில் இருப்பதால், அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.