ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்பு இல்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் நெருங்கிய உதவியாளரான ஆசிஃப், இந்த பயங்கரவாதச் செயலுக்கும் பாகிஸ்தானுக்கும் “எந்தத் தொடர்பும் இல்லை” என்றும், அதை எல்லா வடிவங்களிலும் கண்டிப்பதாகவும் கூறினார்.
இந்தத் தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீருக்குள் இருக்கும் உள்ளூர்ப் படைகள்தான் காரணம் என்று அவர் தொடர்ந்து குற்றம் சாட்டினார்.
“இவை அனைத்தும் உள்நாட்டிலேயே வளர்க்கப்பட்டவை, இந்தியாவிற்கு எதிராக ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கான மாநிலங்களில் புரட்சிகள் நடந்துள்ளன, நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கில், சத்தீஸ்கர், மணிப்பூர் வரை. இந்த எல்லா இடங்களிலும், இந்திய அரசாங்கத்திற்கு எதிராக புரட்சிகள் நடந்துள்ளன,” என்று அவர் கூறினார்.