பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடல் பிரதேசத்தில், 08 கேரள கஞ்சா பொதிகளுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 322 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை சோதனையிட்டபோது, 322 கிலோ 860 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 147 சிறிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதுதவிர, இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.