பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான செயல்முறையைத் தொடங்க நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சுஒரு குழுவை நியமித்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் நடைபெற்ற முதற்கட்ட விவாதத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி வழக்கறிஞர் ரியன்சி அர்சேகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் கூட்டத்தின் போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை முன்னுரிமை என்று அமைச்சர் நாணயக்கார வலியுறுத்தினார்.
அரசியலமைப்பு மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதோடு தேசிய பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும் புதிய சட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
குறுகிய காலத்திற்குள் திட்டங்களை இறுதி செய்யவும், மே மாத தொடக்கத்தில் பொதுமக்கள், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச பங்குதாரர்களுடன் ஆலோசனைகளைத் தொடங்கவும் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீதி, பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சுகள், சட்டமா அதிபர் துறை, சட்ட வரைவாளர் துறை, இலங்கை பொலிஸ்,இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
Trending
- பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுகள் ஏலத்தில் விடப்படும்
- போலி உதைபந்தாட்ட அனியை நாடு கடத்தியது ஜப்பான்
- இந்தியா நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார் தான் ஒப்புக்கொண்டது JeM
- வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு காலிஸ்தானி அமைப்பு மிரட்டல்
- ராணி கமிலா, இளவரசி கேட்டை மெலனியா ட்ரம்ப் வணங்கவில்லை?
- மணல் அகழ்வு திட்டத்தால் 12 மில்லியன் ரூபா வருவாய் இழப்பு
- உலக தரவரிசையில் இலங்கை பாஸ்போர்ட் 97வது இடத்திற்கு சரிந்தது
- அமெரிக்க காங்கிராஸ் உறுப்பினரைச் சந்தித்தார் இலங்கைத்தூதர்