Monday, February 23, 2026 12:04 pm
பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் இன்று அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தில் பயணிகள் 44 பேர் இருந்தனர். பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் பயணிகள் 17 பேர் உயிரிழந்ததுடன் அவர்களில் ஆறு பெண்கள் மற்றும் பதினொரு ஆண்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
மேலும் 8 பெண்கள், 18 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 27 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

