நடிகை சமந்தாவுக்கு ரசிகர் ஒருவர் கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வருவதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீப காலமாக அவரது உடல்நிலை பிரச்சனைக்குரியதாக இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் நடித்திருக்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உடல்நிலை தேறிய நிலையில் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் தெனாலி என்ற பகுதியைச் சேர்ந்த தீவிர ரசிகர் ஒருவர் சமந்தாவுக்கு கோவில் கட்டியுள்ளார்.
சமந்தாவுக்கு சிலை வைத்து, தினமும் அந்த சிலைக்கு பூஜை செய்து வருகிறார்.
‘சமந்தா கோவில்’ என்ற பெயர் வைத்து தினமும் பூஜை நடத்தி வரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் தினமும் இந்த கோவிலுக்கு வருகை தருவதாக தெரிகிறது.