மாத்தறை – தேவேந்திர முனைப்பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி வழங்கியதாகக் கூறப்படும் 4 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூட்டு ஒப்பந்தத்தைப் பெற்ற நபரின் மனைவி, துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட ‘தெஹி பொட்டா’ என்று அழைக்கப்படும் நபரின் உறவினர், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த சந்தேக நபர்களுக்கு தங்குமிடம் வழங்கிய ஒருவர் மற்றும் மேலும் ஒருவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் இன்று (29) மாத்தறை பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.