இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்துள்ளதை தொகுதி வாரியாக அம்பலப்படுத்துவேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பல மாநில சட்டமன்ற தேர்தல்கள்,நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு, ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல்காந்தி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தேர்தல் ஆணையம் ராகுல்காந்தியிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ’வாக்காளர் உரிமை’ என்ற பெயரில் ராகுல்காந்தி யாத்திரையை தொடங்கியுள்ளார். பீகாரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி “வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிடிபட்ட பிறகும் என்னிடம் பிரமாண பத்திரம் கேட்கிறார்கள். வாக்கு திருட்டை சும்மா விட முடியாது என்றார்.