இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் ஏற்றப்பட்ட இலங்கையின் தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது.
ஈழத்தமிழர்களின் விருப்பங்கள் பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்வு கிடைக்கவில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

