புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் கடந்த 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் வளாகத்தில் நடைபெற்றது.
இக் கவியரங்கிற்கு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் செயலாளர் திருமதி
பிரியதர்ஷினி விக்கினேஸ்வரன் தலைமையை ஏற்றார்.அதிகளவில் கவிதாயினிகளும் இளம் கவிஞர்களும் கலந்து கொண்டு ஹைக்கூ கவியரங்கைச் சிறப்பித்தனர்.
