யாழ். தாவடியில் 400 போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி சந்தியில் வைத்து சந்தேகநபரான இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.