தமிழ் மற்றும் சிங்கள புது வருட கொண்டாட்டங்களை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு இன்று காலை 9.04 இற்கு கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நாத தேவாலய பூமியில் நடைபெற்றது.
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி மற்றும் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ். பி. எஸ். அபயகோன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.