தனியார் பஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பருத்தித்துறை வீதி கோப்பாய் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
அச்சுவேலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த கார் ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கோப்பாய் சந்திப் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் பஸ்ஸில் பயணித்த 10 பேரும் காயமடைந்த நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- சூடுபிடித்த பருத்தித்துறை மரக்கறிச் சந்தை விவகாரம்
- பூவற்கரை பிள்ளையார் ஆலய கொடியேற்றம்
- விமான விபத்தில் இறந்தவரின் உடல் மாறி அனுப்பப்பட்டது
- கம்போடியா போர்நிறுத்தத்தை மீறியதாக தாய்லாந்து குற்றம் சாட்டுகிறது
- சீட் பெல்ட் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் அமைச்சர்
- தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
- பானமவில் வெள்ளை யானைகள் : படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
- கடற்றொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டுத் திட்டம்