Friday, March 21, 2025 8:18 am
இரயிலுடன் யானை மோதுவதைத் தடுக்கும் நோக்கில், 500 மீற்றர் தூரம் வரை காட்டு யானைகளைக் கண்டறிய இலங்கை ரயில்வே ஒரு புதிய சாதனத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது.
மட்டக்களப்பு ரயில் பாதையில் சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த சாதனத்தை உருவாக்கிய பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லிலந்த சமரநாயக்க, இந்த சாதனம் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
மட்டக்களப்பு , திருகோணமலை ஆகிய இரயில் பாதைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் உள்ளன.

