டெலிகிராம் சமூக ஊடக கணக்கின் மூலம் பெண்கள் மற்றும் யுவதிகளின், ஆபாசப் படங்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடக செயற்பாட்டாளரான சான்யா ஹேரத் இந்த விடயத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதன்படி, டெலிகிராம் சமூக ஊடக பயனாளர்களுக்குப் படங்களை அனுப்பி பணம் ஈட்டப்படுவதாக அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த பின்னணியிலேயே, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பிரீத்தி இனோகா ரணசிங்க தெரிவித்துள்ளார்.