இலங்கையின் சில பகுதிகளில் தற்போது மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு சிக்குன்குன்யா ஆகிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
டெங்கு , சிக்குன்குன்யா நோய்கள் ஒரே நுளம்புகளால் பரவுகின்றன எனத் தெரிவித்த அவர், இதன் காரணமாக, சுற்றுப்புறத்தை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் நுளம்புகளை பெருக்கத்தைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.