ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) எக்ஸ்போ 2025 கண்காட்சியில் இலங்கை தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியன இணைந்து இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தன. இலங்கை ,ஜப்பான் ஆகிய நாடுகளின் கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார் ஜனாதிபதி.