ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாலைதீவில் தங்கியிருப்பாரென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன் இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ளன.