யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம் கொழும்பு கோத்தா வீதியில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில அமைதியான முறையில்; போராட்டமொன்று நடைபெற்றது.
“எமது பூர்வீக நிலத்தை மீள எம்மிடம் ஒப்படையுங்கள்” என்பதை பிரதானமாக வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பாரம்பரிய நிலங்களை இலங்கை அரச படைகளிடம் இருந்து விடுவிக்க வலியுறுத்தப்பட்டது.
‘மண்ணாசை துறந்த புத்தரின் பிள்ளைகளுக்கு மாற்று இனத்தவரின் மண்ணில் ஏன் ஆசை?, எமது மக்கள் வாழ்வாதாரம் இழந்து வாட அரச படைகள் இலாபம் ஈட்டுவது முறையா? , பூர்வீக காணிகளை இழந்த மக்களாக எமது அகதி வாழ்க்கை போதும்” போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தி மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மன்னார் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில், விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்றனர்.
போராட்டம் நடைபெற்ற பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Trending
- கிழக்கு ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளத்தில் 11 பேர் காயம்
- போயிங் 777 கொழும்பு சேவையை மேம்படுத்துகிறது
- விண்ணில் இருந்து பூமிக்கு வந்தார் சுக்லா
- ஏமனில் பிரியாவின் மரணதண்டனை ஒத்திவைப்பு
- போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் கோளாறை முன்னர் கண்டறிந்ததா இங்கிலாந்து ஒழுங்குமுறை நிறுவனம்?
- தாதியர் சேவை வெற்றிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
- மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி குடும்பஸ்தர் பலி
- ஊழிய, ஊதிய ஒழுங்குபடுத்தல் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்