சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த நிலையில், அவர் முதலிடத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
இதன்படி ஜோ ரூட் இங்கிலாந்து மண்ணில் இதுவரை 24 சதங்களை விளாசியுள்ளார்.
குறித்த பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொன்டிங், தென்னாபிரிக்க அணியின் ஜெக் கலிஸ் மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் 23 சதங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.