Tuesday, July 29, 2025 10:08 am
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்து நேற்று திங்கட்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 எலும்புகூட்டுதொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை அடையாளங்காணப்பட்ட மொத்த மனித எலும்புக்கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.

