சுந்தர்.சி மற்றும் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து ‘கேங்கர்ஸ்’எனும் படத்தை நடித்துள்ளளனர்.
இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வடிவேலுவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்று(24) இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் ப்ரீமியர் காட்சி நேற்று மாலை நடைபெற்றது.
இப்படத்தை சுந்தர்சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து வழங்குகிறது.
இப்படத்தில் கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்திருக்க முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதற்கு பின்பு செய்தியாளர்களிடம் படக்குழுவினர் பேசினர்.
அப்போது வடிவேலு பேசுகையில், “எங்களுக்கு என்ன பேசுறதுன்னே தெரியல”.அந்தளவிற்கு படத்துக்கு வரவேற்பு இருக்கு.குழந்தைங்க முதல் பெரியவங்க வரை எல்லோரும் மனசு விட்டு சிரிக்கலாம். சிரிப்பு மட்டும் இல்ல. அதுல நல்ல கதையும் இருக்கு” என்றார்.
பின்பு சுந்தர்சி-யும் பட வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு சுந்தர்.சி-யை நினைத்து பெருமை படுவதாக கூறினார்.
இதே போல் படத்தில் நடித்த கேத்ரின் தெரசா, சந்தான பாரதி, அருள் தாஸ், பகவதி பெருமாள் உள்ளிட்டோரும் பட வரவேற்புக்கு நன்றி கூறினார்.