பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட தேங்காய் மட்டை சார்ந்த கைத்தொழில் நிறுவன உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடலானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் 27 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது .
இக் கலந்துரையாடலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூல வளங்களை பெற்றுக் கொள்வதில் உள்ள இடர்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இது தொடர்பாக கொள்கை ரீதியான தீர்மானங்கள் எடுப்பதற்கு உதவியாக ஒவ்வொரு நிறுவனங்களும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
சர்வதேச தேங்காய் தினமான செப்டம்பர் 2ஆந் திகதி நடைபெறவுள்ள தேசிய வைபவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது. இந் நிலையில் இலங்கையில் வடமாகாணத்தில் 2வது தெங்கு முக்கோண வலயம் உருவாக்கப்பட்டு அது தொடர்பான செயற்றிட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளமை தொடர்பாகவும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தெங்கு பயிர்ச்செய்கை தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
