ஆசிரியர்கள் , அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான “சுபோதானி குழு அறிக்கை”க்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்காலத்தில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
சுபோதானி குழு அறிக்கையின்படி, சம்பள முரண்பாடுகளை முற்றிலுமாக நீக்க 46 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும், 2022 பட்ஜெட்டில் இந்த சம்பள முரண்பாடுகளில் 1/3 பங்கு நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றாலும், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டமும் அதில் கவனம் செலுத்தவில்லை என்றும்ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இருப்பினும், சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் விவாதித்து, ஒரு பொதுவான முடிவை எட்டுவேன், பின்னர் அரசாங்கத்துடன் விவாதிப்பேன் என்றும் அவர் கூறினார்.
Trending
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு