இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் இடம்பெற்ற மகா கும்பமேளாவில் புனித நதியில் நீராட கூடியிருந்த போது அதிகாலையில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கிய இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இலட்சக்கணக்கான மக்கள் கூடினர். .
இந்த கும்பமேளா ஜனவரி 13 ஆம் திகதி தொடங்கிய பெப்ரவரி 26ஆம் திகதி வரை என மொத்தம் 45 நாட்களுக்கு நடைபெறும். கும்பமேளாவையொட்டி 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2750 கண்காணிப்பு கமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகளை இந்திய அரசாங்கம் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!