கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பு ரிவேரா விடுதியில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஒற்றுமைக்கான பயணத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கை அடிப்டையாகக் கொண்டியங்கும் அரசியல் சக்திகள் அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிட உள்ளதோடு எதிர்காலத்தில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளையும் சிவில் சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து அதனுடாக எதிர்காலத்தில் கிழக்குத் தமிழர்களின் அரசியல்,சமூக பாதுகாப்பு அரணாக பலம்பொருந்திய கட்டமைப்பாக இது செயல்படவுள்ளது.
Trending
- தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
- பாரதீய ஜனதா கூட்டணியால் அமைதிகாக்கும் ஜெயக்குமார்
- பாபா முத்திரையுடன் ஆன்மீக பயணம் சென்ற அண்ணாமலை
- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி
- கணித ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண மாணவர்கள்
- பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி
- சிட்னி முருகன் ஆலயத்தில் புத்தாண்டு வழிபாடு
- அல்-அஹ்லி மருத்துவமனை செயல்பாடுகள் நிறுத்தம்