கெசல்கமு ஓயா வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் நேற்று (09) கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு உபயோகிக்கப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.