Wednesday, April 23, 2025 9:17 am
ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. அந்த அணியின் கே எல் ராகுல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 57 ஓட்டங்கள் சேர்த்தார். இந்த போட்டி முடிந்ததும் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே எல் ராகுல் அருகே வந்து கைகொடுத்து அவரிடம் பேச முயன்றார். ஆனால் மரியாதைக்குக் கைகொடுத்து விட்டு அவரிடம் பேசாமல் நகர்ந்தார் ராகுல்.
கடந்த சீசனில் லக்னோ அணியில் கப்டனாக இருந்த கே எல் ராகுலை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தினார் கோயங்கா. இது சம்மந்தமான ஒரு வீடியோக் காட்சி கூட இணையத்தில் வெளியாகி விமர்சனங்களைப் பெற்றது. அதன் காரணமாகவே லக்னோ அணியில் இருந்து விலகினார் ராகுல்.

