கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (16) மாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டின் முன்பாக நின்றிருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.