Wednesday, April 23, 2025 9:27 am
கிழக்கு மாகாண தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு பெருவிழா செவ்வாய்க்கிழமை (22) ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக உள்ள உவர்மலை சிறுவர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண அமைச்சுக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விளையாட்டு விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இதில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உதவிச் செயலாளர்கள், மாகாண திணைக்களப் பணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் உள்ளிட்ட பல உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்த அதேவேளை அங்கு இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்


