அரகலயவால் பாதிக்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாகப் பெற்ற பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு கிராமத்தையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) தெரிவித்தார்.
‘கிளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தை முன்னெடுக்கும் திட்டத்தில் கிளிநொச்சி ரயில் நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை அமைச்சர் பிமல் ரத்னாயக்க மேற்கொண்டார். ரயில் நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், பயணிகளுடனும் கலந்துரையாடினார்.
அப்போது ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையி,
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்சமாக 5 இலட்சம், 7 இலட்சம், இறுதியாக 10 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த கால அமைச்சர்கள் பல இலட்சங்களை அவர்களது வீடுகளுக்காக நட்டஈடாக பெற்றுக்கொண்டுள்ளனர். உதாரணமாக கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈட்டுத் தொகையை வைத்து இங்கு கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம்.
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் நாடு முழுவதும் காணப்படுகிறது. அது போல கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊதியம் போதாது. அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்.
அந்த பிரச்சினைக்கு மக்களுடனும் கலந்துரையாடி தீர்வு எட்டப்பட வேண்டும். அதனை விரைவில் செய்வோம்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத விடயம் தொடர்பில் எமது மாவட்ட அமைப்பாளர் பார்வையிட்டு, சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கியதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
Trending
- தவம் செய்ய விரும்பு
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை