தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரின் அறிமுக நிகழ்வு கிளிநொச்சி தமிழ்ச்சங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் கஜேந்திரகுமார் பொன்னம் பலத்தின் உரை இடம்பெற்றது.
தமிழ் தேசத்திற்கு இரண்டாவது சந்தர்ப்பத்தை வழங்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைகிறது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் இனவழிப்பு இலட்சிய பற்றுறுதியுடன் பயணித்த எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
JVPக்கு சம அங்கீகாரம் கொடுத்திருப்பது என்பது மன்னிக்க முடியாத ஒன்று.
தூதுவர்கள் எங்களை சந்திக்கும் போது மக்கள் எங்களுக்கு பாடம் படிப்பிக்க தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளதாக குறிப்பிடுகின்றோம்.
24சதவீத வாக்குகளையே தேசிய மக்கள் சக்தி யாழ் மாவட்டத்தில் பெற்றுக்கொண்டது.