மார்க் கானி புதிய பிரதமராக பதவியேற்ற பின் பாவனையாளர்களுக்கான காபன் வரியை நீக்கினார். அதே வேளை பெருமளவு காபன் வெளியேற்றும் தொழிலகங்களுக்கான வரி தொடர்ந்து பேணப்படுகிறது.
ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து இந்த வரி நீக்கத்தால் லீட்டருக்கு 15 தொடக்கம் 20 சதங்கள் வரையிலான விலை வீழ்ச்சியை நாடு முழுவதும் காணக்கூடியதாக உள்ளது. இது கனடா இதுவரை கண்டிராத மிகப்பெரிய விலை வீழ்ச்சியாகும்.
இது மட்டுமின்றி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவுகள் பற்றிய பயம், OPEC + நாடுகள் தமது உற்பத்தியை அதிகரித்தமை போன்ற காரணிகளும் கனடிய பெற்றோல் விலையின் மேலதிக வீழ்ச்சிக்கு காரணங்களாக அமைந்தன.